இலங்கை தொழிலாளர்கள் சவுதியில் வேலை இழக்கும் அபாயம்!
Tuesday, August 2nd, 2016
சவுதி அரேபியாவிற்கு இலங்கை தொழிலாளர்களை அனுப்புவது தொடர்பாக மீண்டும் மதிப்பீடு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியினை தொடர்ந்து சவுதி அரேபியா பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் இரண்டு பாரிய தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கை தொழிலாளர்கள் 112 பேருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நிர்வாக இயக்குனர் உபுல் தேசப்பிரிய செய்தி வெளியிட்டுள்ளார்.
சவுதி அரேபியாவில தற்போது வேலை இழக்கப்பட்ட பத்தாயிரத்திற்கும் அதிகமான இந்தியர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|