இலங்கை தூதரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் ?- பிரதமர் ரணில் தகவல்!

மலேசியாவில் இலங்கை தூதர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்புபட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் விக்ரமசிங்க, இந்தத் தாக்குதல் தொடர்பாக மலேசிய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இந்த விசாரணைகளின் படி நாம் தமிழர் எனும் தென்னிந்திய கட்சியின் மலேசிய கிளையின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டு தாக்குதல்களை நடத்தியுள்ளதாகம் மலேசிய போலிசார் அறிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் இந்தியர்களே சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் விக்கிரமசிங்க, இலங்கையர்கள் எவரும் இந்த தாக்குதலில் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார்
கூட்டு எதிர் கட்சியின் உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இது குறித்து கருத்து தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக அறிவித்தார்.
மலேசியாவில் வைத்து புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு அச்சறுத்தல்களுக்கு எற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய தினேஷ் குனவர்த்தன முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம் சாட்டினார்.
அதற்கு பதில் வழங்கிய பிரதமர் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதிக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்தார்.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி வெளிநாடு செல்லும்போது அவருக்கு தகுந்த பாதுகாப்பை பெற்றுக்கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட நாட்டின் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்க மட்டுமே முடியுமென்று கூறிய பிரதமர் விக்கிரமசிங்க அந்த நாட்டில் வைத்து பாதுகாப்பு வழங்க இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்ப முடியாதென்று அறிவித்தார்.
Related posts:
|
|