இலங்கை – துருக்கி இடையிலான வர்த்தக தொடர்பு மேம்படுத்தப்படும் – ஜனாதிபதியிடம் துருக்கி வெளிவிவகார அமைச்சர் உறுதியளிப்பு!
Saturday, January 29th, 2022இலங்கைக்கும் தமது அரசாங்கத்துக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக, துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லூட் சவ்சோக்லு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வர்த்தக நடவடிக்கைகளைப் பல்வகைப்படுத்துவதன் மூலம், இலங்கையின் பல்வேறு தயாரிப்புகளுக்கு, துருக்கி சந்தைகளில் பரந்தளவிலான வாய்ப்புகள் கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து, தமது நாட்டுத் தொழில் முயற்சியாளர்களுக்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துருக்கி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வழங்கிய பல்வேறு மருத்துவ உபகரணங்கள் உட்பட உதவிகள் மற்றும் ஒத்துழைப்புகளுக்காகத் துருக்கி வெளிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|