இலங்கை திரைப்பட துறைக்கு 75 வருடங்கள் நிறைவு – பல்வேறு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு!

Sunday, December 26th, 2021

தேசிய திரைப்பட துறைக்கு 75 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு விசேட தொடர் வைபவங்களை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கை திரைப்படதுறை ஆரம்பிக்கப்பட்டு அடுத்த மாதம் 21 ஆம் திகதியுடன் 75 வருடங்கள் நிறைவடைகின்றன.

1957 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதி வெளியிடப்பட்ட கடஹூணு பொரோந்துவ நாட்டின் முதலாவது பேசும் திரைப்படமாக கருதப்படுகிறது.

இதேவேளை 60 வயதை கடந்துள்ள சிரேஷ்ட சினிமா கலைஞர்களுக்கு மாதாந்த ஒய்வூதிய கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

சினிமா சஞ்சிகை வெளியிடுதல் 75 வருட நிறைவுக்காக விசேட முத்திரை வெளியிடுதல் உள்ளிட்பட பல நிகழ:வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திரைப்பட கூட்டுத்தாபன இணைப்பு அதிகாரி திருமதி நிரஞ்யா நவரட்ன தெரிவித்துள்ளார்.

இதில் முக்கிய நிகழ்வு பிரதமர் தலைமையில் திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்தில் அடுத்த மாம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கமைவாக திரைப்பட வாரம் ஜனவரி பத்தாம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: