இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து அரசாங்கம் அவதானம்!

Wednesday, July 26th, 2023

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை 2024 மார்ச் மாதம் கைச்சாத்திடுவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

2023. ஜுன் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதிவரை கொழும்பில் இலங்கை ௲ தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான ஐந்தாம் சுற்றுப் பேச்சு நடைபெற்றது.

சுங்க ஒத்துழைப்புக்கள் மற்றும் வர்த்தக வசதிப்படுத்தல்கள், பொருளாதார ஒத்துழைப்புக்களைப் போலவே சுகாதார முறைகள் மற்றும் தாவரச் சுகாதார முறைகள் போன்ற அத்தியாயங்கள் இக்கலந்துரையாடலில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தம் பற்றிய செயற்பாட்டுத் திட்டத்திற்கமைவாக 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் குறித்த பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்வதற்கும், 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதனை மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பற்றிய ஐந்தாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றங்கள் தொடர்பான தகவல்கள் அமைச்சரவையின் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: