இலங்கை – டாக்காவுக்கிடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பிக்க Fits Air விமான சேவை நடவடிக்கை !

Monday, March 25th, 2024

இலங்கை, டாக்காவுக்கிடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பிக்க Fits Air விமான சேவை நடவடிக்கை எடுத்துள்ளது.

Fits Air விமான சேவை எதிர்வரும் ஏப்ரல் மாதம்முதல் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து பங்களாதேஷின் டாக்கா விமான நிலையத்துக்கு சேவையில் ஈடுபடவுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 16 முதல் குறைந்த கட்டணங்களில் இவ்விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.

முதற்கட்டமாக வாரம் இரு முறை டாக்காவுக்கான இவ்விமான சேவைகள் நடைபெறவுள்ளன.இதற்கான ஒரு வழிக் கட்டணமாக 74,600 ரூபாவை அறவிடப்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Fist Air விமான சேவை தற்போது கட்டுநாயக்காவிலிருந்து துபாய், மாலைதீவு மற்றும் சென்னைக்கு நேரடி விமான சேவைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: