இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பித்தள்ளார்!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதியபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்ககிழமை (11) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக அலரிமாளிகையில் ஆரம்பித்துள்ளார்.
அதன்படி பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று காலை 10.30க்கு அலரி மாளிகையில் தனது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்
இலங்கையின் 9 நாடாளுமன்றி புதிய பிரதமராக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் மஹிந்த ராஜபக்ச பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
களனி ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சர்வதேச நாடுகளின் ராஜதந்திரிகள் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிறைவடைந்த நாடாளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, 5 இலட்சத்து 27 ஆயிரத்து 364 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார்.
இது இலங்கை வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிக விருப்பு வாக்குகளாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்நிலையில் நான்காவது தடவையாகவும் பிரதமராக பொறுப்பெற்றுள்ள மஹிந்த ராஜபக்ச இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக அலரிமாளிகையில் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே புதிய அமைச்சர்கள் கண்டி தலதா மாளிகை வளாகத்தின் மகுல் மடுவையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் முன்னிலையில் நாளைய தினம் பதவியேற்கவுள்ளனர்.
அத்துடன் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கமைய, 28 அமைச்சர்களும், 40 ராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.
இந்தநிலையில், நாளையதினம் புதிய அமைச்சரவை பதவியேற்பதற்கு முன்னர் குறித்த அமைச்சுக்களின் கடமைகள் தொடர்பில் அறிவுறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|