இலங்கை – சீன இடையே இறப்பர் – அரிசி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டு நிறைவு – சீனாவில் இருந்து நன்கொடையாக இலங்கைக்கு அரிசி !

Monday, January 17th, 2022

இலங்கைக்கு விரைவில் சீனாவில் இருந்து அரசி, நன்கொடையாக கிடைக்கும் என வர்த்தக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

1952 ஆம் ஆண்டு இலங்கை – சீன இடையே இறப்பர் – அரிசி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த நன்கொடை வழங்கப்படவுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக வர்த்தக அமைச்சர், சீனத் தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரியுடன் அண்மையில் கலந்துரையாடியதாக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது என்றும் வர்த்தக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: