இலங்கை – சீனா இடையில் ஒத்துழைப்புக்களை வலுப்படுத்திக்கொள்ள தீர்மானம்!
Sunday, October 16th, 2016
இலங்கை – சீனாவிற்கும் இடையில் நாடாளுமன்ற ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்திக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்து.
சீனாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் சீன சட்டவாக்கச் சபையின் மிக முக்கிய உறுப்பினரான ஷாங் டிஜியாங் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
சீனாவின் தேசிய மக்கள் காங்கிரசின் குழுக்களின் தலைவரான ஷாங், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை அனைத்துத் துறைகளிலும் கட்டியெழுப்புவதற்கு இலங்கையின் புதிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கும் நன்றி தெரிவித்திருக்கின்றார்.
2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சீனாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அங்கு சென்றுள்ள ஸ்ரீலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவிடம், இரு நாடுகளுக்கும் சீன சட்டவாக்கச் சபையின் மிக முக்கிய உறுப்பினரான ஷாங் டிஜியாங் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
Related posts:
|
|