இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளின் பாதுகாப்பில் சிக்கல்!

Tuesday, July 4th, 2017

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது

இந்த போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் இடம்பெவுள்ளது அடுத்துவரும் மூன்று போட்டிகளும் சூரியவெவ மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில், குறித்த மைதானத்தின் பாதுகாப்பு குறித்து சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சூரியவெவ மைதானத்தை அண்டிய பகுதியில் யானைகள் சரணாலயம் காணப்படுகின்றது.இந்த நிலையில், குறித்த மைதானத்திற்குள் யானைகள் உள்நுழையும் வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே நேற்றைய தினம் கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று அங்கு சென்று நிலமைகளை ஆராய்ந்துள்ளதுஅத்துடன் யானைகள் வராமல் தடுப்பதற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது


இந்தியா அபார வெற்றி!
டெஸ்ட் அணியிலிருந்து ஏபி டி வில்லியர்ஸ் விலகல்!
ஜேர்மனியில் இருந்து உயர்தரத்திலான புகைவிசிறல் இயந்திரங்கள்!
உள்ளூராட்சி தேர்தலை அரசு அறிவித்திருப்பதுபோல் குறித்த காலத்தில் நடத்த வேண்டும் -  ஊடக சந்திப்பில் ஈ....
சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்போரின் தொழில்வாய்ப்பை பறிப்பதற்கு நடவடிக்கை !