இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை – சிங்கப்பூர் பிரதமர்!

Sunday, February 19th, 2017

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இவ்வருடத்திற்கு முன்னர் கைச்சாத்திடப்படவுள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசின் லுங் ( Lee u;sien Loong) தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசின் லுங் தெரிவிக்கையில் இது தொடர்பில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.  இலங்கைக்கு வருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவம் சிங்கப்பூர் பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் வழியில் நேற்று சிங்கப்பூருக்கு விஜயம் செய்தார். இதன் போது இரண்டு பிரதமர்களும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை; நடத்தினார்கள்.

6d78e9e94463913930f6a77f0d6422bf_XL

Related posts: