இலங்கை கைதிகளை அனுப்புவது தொடர்பில் மலேசியா ஆராய்வு!

Saturday, July 23rd, 2016

மலேசியாவில் கைது செய்யப்பட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜைகள் 12 பேரை மீண்டும் நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு அரசாங்கம் விடுத்த கோரிக்கையை ஆராய்ந்து வருவதாக மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி மலேசியாவில் தங்கியிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 38 இலங்கை பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய துணை பிரதமர் அஹமட் சாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.

அத்துடன் 7 இலங்கை பிரஜைகள் போதைப்பொருள் சட்டம் மற்றும் குடிவரவு சட்டத்தை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் மலேசிய துணை பிரதமர் அஹமட் சாஹிட் ஹாமிடி நேற்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதுடன், இலங்கையின் உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது  இலங்கை தொழிலாளர்களுக்கு மலேசியாவில் அதிக வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக மலேசிய துணை பிரதமர் அஹமட் சாஹிட் ஹாமிடிதெரிவித்துள்ளார். அத்துடன் மலேசியாவிற்கு செல்லும் இலங்கை தொழிலாளர்களுக்காக விசேட பயிற்சி பாடநெறியொன்றை இந்நாட்டில் நடாத்துவதற்கு தமது அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மலேசியா துணை பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: