இலங்கை – குவைத்திற்கு இடையிலான விமான சேவைகள் இரத்து!

இலங்கை மற்றும் குவைத்திற்கு இடையிலான அனைத்து விமான பயணங்களையும் ஒரு வார காலத்திற்கு இரத்துசெய்ய குவைத் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி மார்ச் 6 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையில் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவைகள் தெரிவித்துள்ளது.
குவைத் அரசாங்கத்தின் சுகாதார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்துக்கு அமைய இலங்கை , பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், இந்தியா, லெபனான், சிரியா மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து குவைத் நாட்டுக்கு வரும் மற்றும் வெளியேறும் அனைத்து விமானங்களும் 2020 மார்ச் மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் ஒரு வார காலத்துக்கு இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுள்ளது.
Related posts:
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
வாக்குச் சாவடிகளில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்!
பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவு - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நடவடிக்கை!
|
|