இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

Tuesday, November 1st, 2016

கடவுச்சீட்டு தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டிருந்தாலோ செய்ய வேண்டிய நடைமுறைகளை இலங்கையின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடவுச்சீட்டு காணாமல் போனால் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தொலைபேசி எண்களான 011 532 9502 மற்றும் 011 532 9501க்கு தெரிவிக்கலாம்.மேலும் இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ இருப்பவர்கள் இது சம்மந்தமாக அந்தந்த பொலிசாரிடமும் புகார் செய்யலாம் . மேலும் காணாமல் போன கடவுசீட்டு மீண்டும் கிடைத்தால் அதை உபயோகபடுத்த கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிசாரிடம் இது குறித்து கொடுத்த அறிக்கையின் நகலை இலங்கை தூதரகத்தில் கொடுக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு அதை பற்றி தகவல் கிடைத்தவுடன் இலங்கையிலுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு அவர்கள் தகவல் தருவார்கள் என கூறப்பட்டுள்ளது.மேலும் வேறு நபரின் கடவுச்சீட்டு நம் கையில் கிடைத்தால் உடனே குடிவரவு திணைக்களத்துக்கு நாம் அதை பற்றி தெரிவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

immigration-720x480

Related posts: