இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டத்தில் திருத்தம்!
Friday, October 14th, 2016
சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பாக நடவடிக்கையெடுக்கும் வகையில் இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு கொள்கை சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான பதில் அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான பிரச்சினை உள்ளது. இதனால் பாதுகாப்பு அமைச்சு , குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியன இணைந்து இது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றது.
இதன்படி விரையில் குடிவரவு,குடியகல்வு தொடர்பான புதிய கொள்கைகள் தயாரிக்கப் படவுள்ளது. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
வடக்கு கிழக்கில் மேலும் 10000 பேருக்கு வீடுகள் அமைக்கப்படும் - மீள்குடியேற்ற அமைச்சின் சௌலாளர் சிவஞ...
அரச சேவை பட்டதாரிகளின் வயதெல்லை அதிகரிப்பு!
வேலணை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு எட்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் – ஐக்கிய தேசியக...
|
|