இலங்கை கிரிக்கெட் நிறுவத்தின் தலைமை பிரச்சிகளுக்கு தீர்வு காணப்படும் வரை கோப் குழு கூடாது – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவிப்பு!

Friday, November 17th, 2023

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) தலைவர் தொடர்பான பிரச்சிகளுக்கு தீர்வு காணப்படும் வரை குறித்த குழு ஒன்றுக்கூடாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்துள்ளார்.

கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை பதவி நீக்கம் செய்யுமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியதை அடுத்து சபாநாயகரினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

இதன்படி, பேராசிரியர் ரஞ்சித் பண்டார தொடர்பான பிரச்சினையை நிலையியற் கட்டளையின் பிரகாரம் கோப் குழு உறுப்பினர்கள் தீர்க்க வேண்டும் என சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.

இதன்படி, இன்று பிற்பகல் 1.00 மணிக்கு ஒத்திவைக்கப்பட்ட கோப் கூட்டம் இரத்துச் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: