இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ஐ.சி.சி ஊழல் பிரிவு விசாரணை!

Monday, September 25th, 2017

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ஐ.சி.சி ஊழல் ஒழிப்பு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக செயதிகள் வெளியாகியுள்ளன.

சுமார் 40 இற்கும் மேற்பட்ட இலங்கை கிரிக்கெட் போட்டியாளர்கள் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே குறித்த இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.

முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் தெரிவுக்குழு உறுப்பினரான பிரமோத்ய விக்கிரமசிங்கவினால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் அண்மையில் இந்த மகஜர் இலங்கை கிரிக்கெட் போட்டியாளர்களால் கிரிக்கெட் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.