இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜயசூரிய தற்காலிக நியமனம்!

Monday, July 8th, 2024

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜயசூரிய தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய கிறிஸ் சில்வர்வுட்டின் ஒப்பந்தக் காலம் கடந்த இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில்  இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரர்  சனத் ஜயசூரிய தற்காலிக  தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலாங்க கிரிக்கெட் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: