இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் ஜெய் ஷாவே காரணம் – அர்ஜுன ரணதுங்க குற்றச்சாட்டு!

Sunday, November 12th, 2023

இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா மீது முன்னாள் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு அடிபணியும் சூழ்நிலையை உருவாக்கியது.

இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கும் ஜெய் ஷாவிற்கும் இடையே உள்ள தொடர்பு காரணமாக, இலங்கை கிரிக்கெட்டை மிதித்து கட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணத்தில் உள்ளனர்.

“ஜெய் ஷா இலங்கை கிரிக்கெட்டை நடத்துகிறார். ஜெய் ஷாவின் அழுத்தத்தால் இலங்கை கிரிக்கெட் பாழாகிறது. இந்திய நபர் ஒருவர் இலங்கை கிரிக்கெட்டை சீரழிக்கிறார்” என்று அர்ஜுன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாகக் கூறி, சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை கிரிக்கெட்டை தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: