இலங்கை கிரிக்கெட்க்கு இடைக்கால குழு நியமனம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து வெளியானது புதிய வர்த்தமானி அறிவித்தல்!
Wednesday, December 13th, 2023இலங்கை கிரிக்கெட்க்கு இடைக்கால குழு நியமனம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரங்கள், பணிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதற்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இடைக்கால குழு கலைக்கப்படவுள்ளது.
2023 நவம்பர் 05 ஆம் திகதி அர்ஜூன ரணதுங்க தலைமையில் ரொஷான் ரணசிங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு நியமனம் தொடர்பான வர்த்தமானியை வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எட்கா உடன்படிக்கையில் இரகசியமாக கைச்சாத்திடக் கூடாது - அரச மருத்துவ சங்கம்!
தனியார் கல்வி நிலையங்களை பதிவு செய்யுமாறு வடக்கு ஆளுநர் அறிவிப்பு!
இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் வருகையால் கொரோனா பரவல் அதிகரித்தது என தெரிவிக்க முடியாது - அமைச்சர் ப...
|
|