இலங்கை கிரிக்கட் வீரரின் வீட்டுக்கு அதியுயர் பாதுகாப்பு!

Monday, December 24th, 2018

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் வீட்டுக்கு பிரபுக்கள் பாதுகாப்பு வழங்கப்படுவது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தனஞ்சய டி சில்வாவின் தந்தை வசித்து வந்த ரத்மலனாயில் அமைந்துள்ள வீட்டுக்கு இவ்வாறு பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்படுவது குறித்து பொலிஸ் மா அதிபரிடம், பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றை கோரியுள்ளது.

மே மாதம் 25ம் திகதி முதல் பத்து பொலிஸ் உத்தியோகத்தர்களினால் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிரிக்கட் வீரர் தனஞ்சயவின் தந்தை கடந்த மே மாதம் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் உயிரிழந்திருந்தார்.

பாதாள உலகக் குழுவினருக்கு இடையிலான மோதல் காரணமாக இந்த மரணம் சம்பவத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வித அடிப்படையும் இன்றி ஏன் பிரபுக்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts:


குறைந்த வருமானம் பெறுவோரின் பகுதியளவில் நிறைவு செய்யப்பட்ட வீடுகளை பூர்த்திசெய்ய நிதியுதவி – துறைசார...
செயன்முறைப் பரிட்சை இன்றி சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட கல்வி அமைச்சு பரீட்சைகள் திணைக்களத்த...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்ற...