இலங்கை கல்வி முறையில் பாரிய மாற்றம்; இன்றுமுதல் கல்வி நடவடிக்கைகளை ஒளிபரப்பும் வகையில் நடவடிக்கை – தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதி இயக்குனர் தெரிவிப்பு!

இலங்கையில் தற்பொழுது கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதி இயக்குனர் ரஞ்சித் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இன்றுமுதல் 16 மணித்தியாலங்கள் கல்வி நடவடிக்கைகள் ஒளிபரப்பும் வகையில் ஊடகங்ளின் ஆதரவு பெற்றுக்கொள்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தொலைக்காட்சி சேவையான Channel eye ஐ யை பயன்படுத்தி இந்த வேலைத்திட்டத்தை காலை 4 மணிமுதல் இரவு 12 மணி வரை வாரத்தின் 7 நாட்கள் முழுவதும் ஒளிபரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி தினமும் காலை 4 மணிமுதல் காலை 6 மணி வரை உயர்தர மாணவர்களுக்காகவும், அதன் பின்னர் ஏனைய வகுப்புகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை சிங்கள மொழியில் ஒளிபரப்பப்படவுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை தமிழ் மொழியில் ஒளிபரப்பப்படுகின்றது.
இரண்டு வாரங்கள் முழுவதும் முன்னெடுக்கப்படும் இந்த சேவையின் 11வது நாள் ஆங்கில மொழியில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சிகாக மேல் மாகாணத்தில் பிரதான பாடசாலை அதிபரின் உதவியுடன் 200 ஆசிரியர்களின் உதவி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் தமிழ் மொழிக்காக யாழ் மாவட்டத்தின் பிரதான பாடசாலைகளின் ஆசிரியர்களின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பில் மேலதிக தகவல்களை 1377 அல்லது 011-7601702 என்ற என்ற விசேட இலக்கத்துன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|