இலங்கை – கட்டார் மத்திய வங்கிகளின் ஆளுநர்களுக்குமிடையில் சந்திப்பு – பொருளாதாரத்தை புத்துயிர்பெறச் செய்யும் வழிவகைகள் குறித்தும் ஆராய்வு!

கட்டார் மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், கட்டார் மத்திய வங்கியின் ஆளுநர் அதிமேதகு செய்க் அப்துல்லா பின் சவூத் அல்-தானியுடன் கொவிட் தாக்கங்களிலிருந்து உரிய பொருளாதாரங்களை புத்துயிர்பெறச் செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் இலங்கை – கட்டார் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தல் போன்றவற்றில் இலங்கை மத்திய வங்கிக்கும் கட்டார் மத்திய வங்கிக்கும் இடையிலான ஒத்துழைப்பு மீதான கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரசியல் தளம்பல்: தடுமாறுகிறது இலங்கையின் பொருளாதாரம் - உலக வங்கி!
நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை - அரசாங்கம் !
எரிவாயு சிலிண்டர்கள் குறித்து விசேட பரிசோதனை - அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப்பு!
|
|