இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய கப்பல்கள் விமானங்கள் தொடர்பான தரவுகளை பதிவேற்றம் செய்ய மத்திய கலாசார நிதியம் நடவடிக்கை!

இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய கப்பல்கள் மற்றும் விமானங்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் பதிவேற்றம் செய்ய மத்திய கலாசார நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இவை தொடர்பான தகவல்களை WWW.CCF.GOV.LK இணையத்தளத்திற்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும் என அதன் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், இலங்கை கடற்பரப்பிற்குள் மூழ்கிய 101 கப்பல்கள் மற்றும் 6 விமானங்கள் தொடர்பான விரிவான தகவல்களை பொதுமக்கள் பெற முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.
சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் காமினி ரணசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு!
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பு - மஹிந்த தேசப்பிரிய!
நினைத்தவுடன் எவரையும் கைது செய்யும் அதிகாரத்தை எவரிடமும் நான் ஒப்படைக்கவில்லை – ஜனாதிபதி தெரிவிப்பு...
|
|
நிறுவனங்களை பதிவு செய்வதற்கான கட்டணங்களில் திருத்தம் – ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு...
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் தாய்லாந்துடன் 3 ஆம் சுற்று பேச்சுவார்த்தை - ஜனாதிபதி அமைச்சரவைக...
நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு அமைச்சர் டக்ளஸின் கருத்துக்கள் முன்மாதிரியானவை. - அமைச்சர் மனு...