இலங்கை கடற்பரப்பிலிருந்து சென்ற படகு மீது இந்திய கடலோர படையினர் தாக்குதல்!

Wednesday, November 16th, 2016

ஆயுதங்களுடன் இலங்கை கடற்பரப்பில் இருந்து சென்ற படகு ஒன்றின் மீது இந்திய கடலோர படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்  தெரிவிக்கின்றன.

இந்திய கடலோர படையினருக்கு இலங்கை கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவல் அடிப்படையில் குறித்த படகினை ராமேஷ்வரம் ஓலைக்குடா பகுதியில் வைத்து இந்திய கடலோர படையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த படகில் இருந்த இரண்டு நபர்கள் இந்திய கடலோர படையினர் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தியதுடன் குறித்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

fishermen4

Related posts: