இலங்கை கடற்படையினர் அதிரடி நடவடிக்கை – சட்டவிரோத இந்திய மீன்பிடியாளர்கள் 23 பேர் கைது!

Thursday, October 14th, 2021

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத எல்லைதாண்டிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கிழக்கு கடற்பரப்பின் வெற்றிலைகேணி பகுதியில் எல்லைதாண்டிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு ட்ரோலர் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 23 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொவிட் 3 ஆவது அலை பரவ ஆரம்பித்த கடந்த மார்ச் மாதம் முதல், அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை. அதன்பின்னரான காலத்தில் முதல் தடவையாகவே, இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: