இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்!

Wednesday, June 21st, 2017

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீர இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன இன்று காலை தனது கடமைகளை ஆரம்பித்தார்.  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சட்டத்திற்கு அமைய அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக புதிய தலைவர் உறதி அளித்தார்.

இத்துறையில் சவாலை வெற்றிகொள்ள அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்ப்பார்ப்பதாக அவர் கூறினார். சிவில் சமூக செயற்பாட்டாளரான தாம் எந்தக் கட்சியையும் சேர்ந்தவர் அல்ல என்றும் அவர் கூறினார். முன்னாள் தலைவர் சட்டத்தரணி நந்த முறுத்தெட்டுவேகம ஆற்றிய பணிகளையும் அவர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

ஆரசாங்கம் பாரிய அளவிலான பணிகளை நிறைவேற்றினாலும்இ அதுபற்றிய தகவல்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் சிரேஷ்ட ஊடகப் பணிப்பாளர் தர்மஸ்ரீ பண்டார இந்த நிகழ்வில் தெரிவித்தார்.

Related posts:


கொரோனா தொற்றின் வேகம் முன்னரை விட அதிகம் - தடுப்பதற்கு பொது மக்களின் முழுமையான பங்களிப்பு அவசியம் -...
சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுக் கொடுக்க ஆலோசனை - சுகாதார அமைச்சர்...
75% பல்கலைக்கழக ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு த...