இலங்கை ஒர் இறையாண்மை உள்ள நாடு – தமது நாட்டினை எப்படி நிர்வகிப்பது என்பதை இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டும் – இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவிப்பு!

Wednesday, September 1st, 2021

இலங்கையின் செழிப்பை உறுதி செய்வதற்கும் ஊக்குவிப்பதற்கும், அனைத்து குடிமக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அத்துடன் நல்லாட்சி, சட்டம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ஒன்றாக இணைந்து செயற்பட முடியுமெனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பின் ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அமெரிக்கத் தூதுவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர் –

இலங்கை ஒர் இறையாண்மை உள்ள நாடு. தமது நட்டினை எப்படி நிர்வகிப்பது என்பதை இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டும். இலங்கையுடன் மாத்திரமல்ல – வேறு எந்த நாட்டுடனும் எமது உறவுகள் வெளிப்படையானது. அது பரஸ்பர நன்மை பயக்கும் என நாம் நம்புகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கையுடன் அமெரிக்காவுக்கு அப்படிப்பட்ட உறவு காணப்படுவதாகவே நாம் நம்புகிறோம். அதற்கும் மேலாக, எங்களுக்கும் ஒரு கூட்டு உறவு காணப்படுகின்றது. அந்த உறவு இருவழிப் பாதையாக இருக்க வேண்டும்.

எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு 70 வருடங்களுக்கு மேலாக காணப்படுகின்றது. 60 வருடங்களாக அமெரிக்கா இலங்கைக்கு அபிவிருத்தி உதவிகளை வழங்கி வருகின்றது., எனவே ஒரு பரிவர்த்தனையை விட உறவில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: