இலங்கை எதிராக விதிக்கப்பட்டிருந்த தற்காலிக பயணத் தடையை பல நாடுகள் நீக்கியுள்ளன!
Sunday, June 2nd, 2019இலங்கை அரசாங்கம் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கை எதிராக விதிக்கப்பட்டிருந்த தற்காலிக பயணத் தடையை பல நாடுகள் நீக்கியுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் பல இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
நெதர்லாந்து, ஜேர்மன், இத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் பயணத் தடையைத் தளர்த்தியுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலை அடுத்து பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கைக்கான பயணத் தடையை விதித்திருந்தன.
எனினும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு பல நாடுகள் இலங்கைக்கான பயணத்தடையை தளர்த்தியுள்ளன. சீனா மற்றும் இந்திய நாடுகளும் இலங்கைக்கான சுற்றுலா பயண எச்சரிக்கையை தளர்த்தியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து வெளிநாட்டு பயணிகள் இலங்கை வருவதை முற்றாக தவிர்த்திருந்தனர். அத்துடன் இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களும் தமது நாட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.
இதன்காரணமாக சுற்றுலாத்துறையின் மூலம் பெறப்படும் அதிகளவான வருமானம் கடந்த ஒரு மாத காலமாக முற்றாக இல்லாமல் போயுள்ளது. இதன் தாக்கம் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
|
|