இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை – பிரித்தானியா அறிவிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் பிரித்தானியாவால் இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சிவப்பு எச்சரிக்கையில் ஆப்கானிஸ்தான் பஹ்ரேன் போன்ற நாடுகளும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 7 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டிலிருந்து பிரித்தானியாவிற்கு வருகை தரும் நபர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த சிவப்பு எச்சரிக்கையானது எதிர்வரும் 8 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எதிர்வரும் 10ஆம் திகதி பிரதமர் யப்பான் விஜயம்!
புதிய வெளிவிவகார அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்றார் !
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு புதிய எஸ்.எஸ்.பி!
|
|