இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விரைவாக தடுப்பூசி விநியோகிக்குமாறு ஜீ-7 நாடுகளிடம் யுனிசெப் கோரிக்கை!

Tuesday, May 18th, 2021

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விரைவாக கொவிட் 19 தடுப்பூசிகளை விநியோகிக்குமாறு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யுனிசெப், ஜீ – 7 நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் யுனிசெப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹென்ரியெட்டா ஃபோரெ  தெரிவிக்கையில் –

தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள இரண்டாம் அலை கொவிட் பரவலால் அந்த நாடு பெரும் நெருக்கடியில் உள்ளது. அதனை அண்டிய நாடுகளான இலங்கை, நேபாளம் மற்றும் மாலைத்தீவு போன்ற நாடுகளிலும் குறிப்பிடத்தக்க அளவு வேகமாக கொவிட் 19 நோய்ப்பரவல் அதிகரித்து வருகிறது.

இந்த நோய்ப்பரவலை கண்டுக்கொள்ளாது இருப்பதானது, பெரும் நெருக்கடி நிலைமையையும், புதிய வகையான கொரோனா வைரஸ் திரிபுகள் உருவாகும் சூழ்நிலையும் ஏற்படுத்தும்.

இந்நிலையில், மோசமான நிலைமையை தடுப்பதற்கான ஒரேவழி, துரிதமாக அந்த நாடுகளுக்கு கொவிட் 19 தடுப்பூசிகளை விநியோகிப்பதேயாகும். இதற்கான நடவடிக்கைகளை ஜீ – 7 நாடுகள் கொவெக்ஸ் திட்டத்தின் ஊடாக முன்னெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: