இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சிங்கப்பூர் பயணத்தடை விதிப்பு!

Saturday, May 1st, 2021

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து பிரவேசிப்பவர்களுக்கு சிங்கபூர் தடை விதிக்கிறது. இதற்கான தீர்மானத்தை சிங்கபூரின் அமைச்சரவை மேற்கொண்டது.

இதன்படி, இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு, அண்மையில் சென்றவர்கள் மற்றும் அந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் சிங்கபூருக்கு பிரவேசிக்க தடை விதிக்கப்படுகிறது.

எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதிமுதல் இந்தத் தடை அமுலுக்கு வருகிறது. அதேபோன்று இலங்கையில் இருந்து பிரவேசிப்போருக்கு, இத்தாலியும் தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: