இலங்கை – ஈரான் கூட்டு ஒத்துழைப்பு நடவடிக்கை!
Monday, February 12th, 2018
இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தூதுக்குழு இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையில் வர்த்தக மற்றும்பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.
இலங்கை அதிகாரிகளுடன் ஈரானின் எரிசக்திதுறையின் உயர்அதிகாரி ரசோல் தலைமையிலான குழுவினர் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் இந்தஉடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இப்பேச்சுவார்த்தையின் போது இதற்குரிய திட்டங்களை துரிதமாக விரிவுபடுத்துவது குறித்தும் இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில்சுகாதாரம் மற்றும் கலாச்சார துறைகளை பரிமாறிக்கொள்வது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிகழ்வில் பிரதி வர்த்தக தொழிற்துறை அமைச்சர் மற்றும் ஏற்றுமதி துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related posts:
தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை: வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கு...
ஆதரவுக் கரம் கொடுத்தது ஈ.பி.டி.பி.: வலிகாமம் மேற்கு பிரதேச சபையையும் வென்றெடுத்தது தமிழ் தேசியக் கூட...
பிம்ஸ்டெக் அமைப்பின் 24 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள வ...
|
|