இலங்கை இனவாதம் வளர்வதை  தடுக்கவேண்டும்– மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தல்!

Monday, November 21st, 2016

இலங்கையில் மீண்டும் இனவாத உணர்வுகள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன என்று தெரிவித்துள்ள பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள், அவற்றைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

ஜெனிவாத் தீர்மானம் மூலம் இலங்கை அரசும் தன்னை நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு அர்ப்பணித்துள்ளது. சமீப நாட்களில் இலங்கையில் நாங்கள் அவதானிக்கக் கூடியதாகவுள்ள அபத்தான உரைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் அதிகாரிகளுக்குள்ளது என்று தெரிவித்த அனைத்துலக மனித உரிமை கண்கானிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் பிரட் அடம்ஸ், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் போன்றவற்றுக்காக தன்னை அர்ப்பணித்த நாட்டில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டார். இலங்கை அனைத்து மக்களுக்கும் மனித உரிமைகளையும், பெறுப்புக்கூறலையும் உறுதிசெய்யும் நடவடிக்கையை முன்னெடுத்தது. அனைத்துலக மன்னிப்புச் சபை தனது உறுதியான ஆதரவை வழங்குகின்றது. இவற்றை குழப்ப முனையும் வெறுப்பை தூண்ட முயலும் சக்திகளை அரசு எதிர்க்க வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபையின் தென்னாசியாவுக்கான இயக்குநர் தெரிவித்தார்.

1348029324HR-01-720x480

Related posts:


துல்லியமான தரவின்றி கொரோனாவை எதிர்த்துப் போராடுவது கடினம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்ப...
யாழ்ப்பாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 75 வீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - வடக்கு மாகாண ச...
தொல்லியல் எச்சங்கள் மீட்கப்பட்ட ஆனைக்கோட்டையில் சட்டவிரோத மண் அகழ்வு - தடுத்துநிறுத்தக் கோருகிறது வ...