இலங்கை – இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையே சந்திப்பு!

Saturday, August 3rd, 2019

இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் பாங்கொக்கில் சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் நடைபெற்று வரும் ஆசியான் பாதுகாப்புப் பேரவை மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள வேளையிலேயயே இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கும் என ஜெய்சங்கர் இந்த சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

Related posts: