இலங்கை இந்திய மீனவர்  விவகாரம் : 3ஆவது சுற்று பேச்சுவார்த்தை கொழும்பில்!

Wednesday, April 5th, 2017

மீனவர் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதற்கான இலங்கை இந்திய கூட்டுக்குழுவின் 3ஆவது சுற்று பேச்சுவார்த்தை கொழும்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்திய மத்திய விவசாய மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராதாமோகன்சிங் தலைமையிலான பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் அமைச்சின் செயலாளர் மங்களிக்கா அதிகாரி, பணிப்பாளர் கிறிஸ்ரி லால் பெர்னான்டோ , மீன்பிடித்துறைக்கு உட்பட்ட மாகாண அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இலங்கை குழுவில் பங்குகொள்ளவுள்ளனர்.

பேச்சுவார்த்தை தொடர்பாக அமைச்சர் மகிந்த அமரவீர கருத்து தெரிவிக்கையில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மீன்பிடிப்பிரச்சினைக்கு இந்த பேச்சுவார்த்தை இறுதித்தீர்வுக்கு வழிவகை செய்யும் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக வடக்கு மீனவசங்க பிரதிநிதிகளுடன் அமைச்சரின் தலைமையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.இந்த பேச்சுவார்த்தையில் தமிழ்நாட்டு மீனவசங்க பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Related posts: