இலங்கை – இந்திய உறவை வலுப்படுத்தும் உண்மையான நண்பனாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா – இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவிப்பு!

Sunday, March 13th, 2022

இலங்கை – இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் இராஜதந்திர ரீதியில் மாத்திரமன்றி  மக்களுக்கிடையிலான உறவுகளும் வலுவாக இருக்க வேண்டும் என்பதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியுடன் செயற்படுவதாக தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கவனத்தில் எடுத்துள்ள இந்திய அரசாங்கம் அவைதொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், கொறோன பரவல் காரணமாக கடந்த வருடம் கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் இலங்கை இந்திய யாத்திரீகர்கள் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே இம்முறை எவ்வாறு நடைபெறுமோ என்று நாம் சிந்தித்துக் கொண்டிருந்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சியின் பலனாக இரண்டு நாடுகளிலும் இருந்து தலா 100 யாத்திரீகள்கள் கலந்து கொண்டு தமது பாரம்பரிய உறவுகளை வலுப்படுத்தும் வகையிலான வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். அதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகளை கவனத்தில் கொண்டுள்ள இந்திய அரசாங்கம் அதுதொடர்பான வேலைத் திட்டங்களிலும் கரிசனையுடன் ஈடுபட்டு வருகின்றது.

அதேபோன்று, யாழ்ப்பாண மக்களுக்காக இந்தியாவினால் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபத்தின் செயற்பாடுகளும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கலாச்சார மண்டபத்தின் பாராமரிப்பு மற்றும் செயற்பாடுகளை இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இணைந்து முன்னெடுப்பதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே யாழ்ப்பாண மக்கள் கலாச்சார மண்டபத்தின் செயற்பாடுகளுக்கான ஒத்துழைப்புக்களை பூரணமாக வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.   –

000

Related posts: