இலங்கை – இந்திய உறவுக்கு பாதிப்பின்றி மீனவர் பிரச்னைக்கு தீர்வு – அமைச்சர் ரமேஷ் பத்திரண நம்பிக்கை!

Wednesday, October 27th, 2021

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பான பிரச்னையை இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, இராஜதந்திர ரீதியில் தீர்த்துக்கொள்வதற்கு இலங்கை அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

இலங்கை – இந்திய மீனவர் பிரச்னை தொடர்பில், அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

“மீனவர் பிரச்னை தொடர்பில் இராஜதந்திர ரீதியில் இந்திய அரசுடன் இலங்கை அரசு தொடர்ச்சியாகப் பேசி வருகின்றது.

ஆனால், துரதிஷ்டவசமாக இலங்கை – இந்திய கடல் எல்லைகள் அடையாளமிடப்படாத ஒன்றாக இருப்பதால், இந்திய மீனவர்கள் எமது கடலுக்குள் தெரிந்தோ தெரியாமலோ நுழைகின்றனர்.

எனினும், இந்த விடயத்தில் நாடுகளுக்கு இடையிலான நட்புறவுகளைப் பாதுகாத்து, இராஜதந்திர ரீதியில் செயற்பட்டே தீர்வுகாண வேண்டும்” என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: