இலங்கை – இந்தியா இடையே பயணிகள் கப்பல் சேவை!

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்த கப்பல் சேவையை ஆரம்பிப்பது பற்றி ஆராயும் நோக்கில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பாளர் அசோக் ராவோ அண்மையில் தலைமன்னாருக்கு விஜயம் செய்து தலைமன்னார் கடற்படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட உள்ளது.
இறுதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது கப்பல் சேவை ஆரம்பிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது.
Related posts:
மாகாணசபைகளில் பிரிவினைவாதம் பேசத்தடை - பிரதமர்!
மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது வீதி விபத்து மரணங்கள் – கவலை வெளியிட்ட பணிப்பாளர் சத்தியமூர்த்தி !
கோழி முட்டையின் விலை சடுதியாக உயர்வு – பேக்கரி உரிமையாளர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!
|
|