இலங்கை – இந்தியா இடையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து – இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, March 29th, 2022

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருக்கு இடையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பைத் தொடர்ந்தே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

அவற்றில் இந்திய உதவியுடன் ஏற்படுத்தப்படவுள்ள ஷங்ரி லங்கா அடையாள டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பான உடன்படிக்கை, யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள மூன்று தீவுகளில் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கும் ஒப்பந்தங்களும் உள்ளடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார மீட்சி, அபிவிருத்தி பங்குடைமை, பரஸ்பர பாதுகாப்பு, மீனவர்கள் விவகாரம் மற்றும் சர்வதேச ரீதியிலான ஒன்றிணைவு தொடர்பாகவும் குறித்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பில் நடைபெறும் பிம்ஸ்டெக் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டிலும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்கவுள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: