இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை முதலாம் வகுப்பில் 31 பேருக்கு பதவி உயர்வு  : 7 பேர் தமிழ், முஸ்லிம்கள்!

Saturday, August 4th, 2018

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை முதலாம் வகுப்பில் 31 பேர் இரண்டாம் கட்டமாக அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 7 பேர் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்களாவர். அவர்களது விபரம் வருமாறு:

எம்.ஐ.எம்.நவாஸ், வீ.பரமேஸ்வரன், ரீ.கணேசரட்ணம், ஆர்.லோகேஸ்வரன், செல்வராசா செல்வமலர், ரீ.குகதாசன், திருமதி.ஏ.எஸ்.யோகராசா, கடந்த ஜீன் மாதம் 74 பேர் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை முதலாம் தரத்திற்கு முதலாம் கட்டமாக பதவி உயர்த்தப்பட்டனர்.

இவர்களுள் 16 பேர் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்களாவர்.இதேவேளை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தமது பட்ட படிப்பை மேற்கொள்பவர்களது பட்டச் சான்றிதழ் உறுதிப்படுத்தப்பட்ட பின் அவர்களுக்கான பதவி உயர்வு வழங்கப்படுமென அரச சேவைகள் ஆணைக்குழு செயலாளர் தயா செனரத் தெரிவித்துள்ளார்.

Related posts: