இலங்கை அரசின் இயற்கை விவசாய முயற்சிகளிற்கு ஆதரவளிப்பதற்காகவே நானோ நைட்டிரஜன் உரத்தை இந்திய வழங்கியுள்ளது – இந்திய தூதரகம் தெரிவிப்பு!

Thursday, November 4th, 2021

இலங்கை அரசின் இயற்கை விவசாய முயற்சிகளிற்கு ஆதரவளிப்பதற்காகவும் இலங்கை விவசாயிகளிற்கு நானோ நைட்டிரஜன் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும் இந்திய அரசாங்கம் இரண்டு விமானங்களில் நானோ நைட்டிரஜன் உரங்களை அனுப்பிவைத்துள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது.

இது குறித்துமேலும் மேலும் தெரிவிக்கப்படுகையில் –

இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து இன்று அதிகாலை இந்திய விமானப்படையின் இரு விமானங்கள் நானோ நைட்டிரஜன் உரங்களுடன் இலங்கை வந்தடைந்தன.

இந்திய விமானப்படையின் சி17 குளோப்மாஸ்டர் விமானங்கள் 100 ஆயிரம் நானோ நைட்டிரஜன் உரங்களுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தன.

இலங்கை அரசாங்கத்தின் இயற்கை விவசாய முயற்சிகளிற்கு ஆதரவளிப்பதற்காகவும் இலங்கை விவசாயிகளிற்கு நானோ நைட்டிரஜன் உரங்கள் கிடைப்பதை துரிதப்படுத்துவதுமே இதன் நோக்கம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை விமானப்படையினருடன் நெருக்கமான இணைந்து சி17 விமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன, இந்திய விமானப்படை விமானங்களை விரைவாக பயன்படுத்தியமை அவை உரங்களுடன் இலங்கையில் தரையிறங்கியமை ஆகியன இரண்டு சேவைகளிற்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பை வெளிப்படுத்தியுள்ளன.

இந்திய விமானங்களை இலங்கை விமானப்படையின் பிரதானி ஏவிஎம் பிரசன்ன பாயோ வரவேற்றார், உடனடி நடவடிக்கை மற்றும் தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு அவர் நன்றியை தெரிவித்தார்.

முன்பதாக எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்திற்கு பின்னர் கடல்பயணத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்திய கடற்படை கப்பல் 2021 ஜூன்- ஜுலை மாதங்களில் கொழும்பிற்கு அப்பால் ஒரு ஆய்வு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.

கொவிட் தொற்றின் நான்காவது அலையின் போது 100 தொன் திரவ மருத்துவ ஒக்சிசனை வழங்குவதற்காகஐஎன்எஸ் சக்தி பயன்படுத்தப்பட்டிருந்தது..

அயல்நாட்டிற்கு முதன்மை என்ற தனது கொள்கையின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்திற்கு முக்கிய தேவைகள் எழும்வேளைகளில் இந்திய அரசாங்கம் உதவி வழங்கிவருகின்றது,

மேலும் பிராந்தியத்தில் முதல் பதிலளிப்பவர் என்ற தனது திறனையும் பங்களிப்பையும் தொடர்ச்சியாக நிரூபித்து வருகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: