இலங்கை – அமெரிக்கா இடையே வர்த்தக தொடர்புகளை மேம்படுத்த நடவடிக்கை!

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமெரிக்க வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் ஸ்டெஃபன் ரென்னாதெரிவித்துள்ளார்.
அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் உள்ள அமெரிக்க நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இலங்கைக்கானஅமெரிக்காவின் ஏற்றுமதிகளை மேலும் அதிகரிப்பது குறித்து ஆராய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது
மேலும் இலங்கையுடன் திறந்த, நியாயமான மற்றும் பரஷ்பர வர்த்தக தொடர்புகளை மேம்படுத்திக் கொள்ள, அமெரிக்கா ஆர்வத்துடன் இருப்பதாக ஸ்டெபன் ரென்னா குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
விரைவில் 23000 ஆசிரியர்கள் சேவையில் இணைக்கப்படுவர் - கல்வி அமைச்சர்
மாட்டுவண்டிலில் சபைக்குச் சென்ற மஹிந்த அணியினர்!
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது தாக்குதல் - ஒருவர் கைது!
|
|