இலங்கை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்தியப் பிரதமர் இரங்கல்

தற்போது இலங்கையில் பெய்து வரும் மழை காரணமாக உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினருக்கு தன்னுடைய இரங்கலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக தென் மாகாணம் உட்பட பல்வேறு நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அத்தோடு இதுவரை 100 பேர்வரை உயிரிழந்துள்ளனர் எனவும், நுாற்றுக்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ஆறு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, முப்படையினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிவாரணப் பணிகளை விரைந்து செயற்படுத்துமாறு உத்தரவிட்டிருக்கிறார்.
இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி,இரண்டு நிவாரணக் கப்பல்கள் அனுப்பியுள்ளதாகவும், அதில் ஒன்று நாளை காலை கொழும்பைச் சென்றடையும் என்றும், மற்றைய கப்பல் ஞாயிற்றுக் கிழமை செல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|