இலங்கை அகதிகளை அழைத்து வருவதற்கு நடவடிக்கை!

Thursday, March 17th, 2016
இந்திய அகதி முகாம்களில் தங்கியுள்ள மேலும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை அகதிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இவர்கள் இந்தியாவிற்கு சென்று தஞ்சமடைந்திருந்ததாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வி. சிவஞானசோதி தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.இதுவரை சுமார் 5,000 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts: