இலங்கையை வந்தடைந்தார் பிரிகேடியர் பிரியங்க!

இலண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இலங்கை வந்தடைந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இதனையடுத்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை பணி இடைநிறுத்தம் செய்ய இலங்கை வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு அந்த பணி நிறுத்த உத்தரவை இரத்து செய்தார். இந்நிலையில் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை நாட்டுக்கு அழைத்து விளக்கம் கேட்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது. அதன்படி அவர் இன்று நாடு திரும்பியுள்ளார்.
Related posts:
ஒரே நாளில் மாகாணசபைத் தேர்தல் - பிரதமர்!
உண்மை நீதி ஆணைக்குழு ஜனவரியில் அமைக்கப்படும் - பிரதமர் ரணில் உறுதி!
சிகரெட்டின் விலை அதிகரிப்பு!
|
|