இலங்கையை பின்பற்றியது துனிசியா!

Saturday, July 6th, 2019

வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் பெண்கள் பொது இடங்களில் பர்தா அணிவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக, துனிசிய அரசாங்க அலுவலகங்களில் பெண்களுக்கான பர்தாவை தடை செய்ய துனிசியா பிரதமர் யூசெப் சாஹெட் முடிவு செய்துள்ளார். சமீபத்தில், இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் அந்நாட்டிலும் பர்தா அணிய அந்நாட்டு அரசு தடை விதித்து குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு காரணங்களுக்காக பொது நிர்வாகங்கள் மற்றும் நிறுவனங்களில் முகம் மூடியபடி எவரும் அணுகுவதை தடைசெய்யும் ஒரு அரசாங்க சுற்றறிக்கையில் துனிசியா பிரதமர் சாஹெட் கையெழுத்திட்டுள்ளார்.

ஜூன் 27 ம் திகதி துனிஸில் நடந்த இரட்டை தற்கொலை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இரண்டு பேர் இறந்தனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர். இந்நிலையில், கண்களைத் தவிர்த்து முழு முகத்தையும் மறைக்கும் பர்தா மீதான தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பர்தா அணிவதை மேற்பார்வையிடவும், மாறுவேடமாக பயன்படுத்துவதை தடுக்கவும், அந்நாட்டு உள்துறை அமைச்சர் 2014 பிப்ரவரியில் பொலிசாருக்கு அறிவுறுத்தினார் என்பது நினைவுக் கூரதக்கது.

இதனைத் தொடர்ந்து பர்தாவுக்கு தடை விதித்துள்ள ஐரோப்பா மற்றும் சில ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பட்டியலில் துனிசியாவும் சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: