இலங்கையை பின்னிலைப் படுத்தியுள்ள அமெரிக்கா!

ஆட்கடத்தல் விடயத்தில் இலங்கையை, அமெரிக்கா தமது வருடாந்த அறிக்கையில் பின்னிலைப் படுத்தியுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் நேற்று இந்த அறிக்கை வெளியாக்கப்பட்டது. இதில் இலங்கையை ஆட்கடத்தல் விடயத்தில் இரண்டாம் அடுக்கில் கண்காணிப்பு பட்டியலில் தரப்படுத்தி இருப்பதாக இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு போதிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. எனினும் முந்திய ஆண்டைக்காட்டிலும் தற்போது இந்த விடயத்தில் அரசாங்கம் ஓரளவுக்கு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
அதேநேரம் இந்த விடயத்தில் அரசாங்கத்தின் மேலதிக செயற்பாடுகள் தேவைப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
குடாநாட்டு வெள்ளத்துக்கு தவறான வடிகாலமைப்பே காரணம் - அனர்த்த முகாமைத்துவ நிலையம்!
மட்டக்களப்பில் 24 மணித்தியாலயத்தில் 4 மரணங்கள் 64 பேருக்கு கொரோனா - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்ப...
நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் அடுத்த தொகுதியும் இலங்கைக்கு - விவசாய அமைச்சு தெரிவிப்பு!
|
|