இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா : தனிமைப்படுத்தல் காலத்தை 21 நாட்களாக அதிகரிக்க முடிவு!

Wednesday, April 8th, 2020

தனிமைப்படுத்தல் காலத்தை 14 நாட்களில் இருந்து 21 நாட்களாக அதிகரிக்க தேசிய கொவிட் -19 நடவடிக்கை நிலையம் தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை கொரோனா வைரஸ் தொற்றி இருக்கின்றதா இல்லையா என்பதை கண்டறிய நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இவ்வாறு 14 நாட்கள் கண்காணிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட நபர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் முன்னர் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நபர்கள் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது.

Related posts: