இலங்கையைச் சேர்ந்தவர் கத்திக்குத்தில் ஈடுபட்டமை குறித்த மேலதிக தகவல்களைக் கோரியுள்ளோம் – வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!

இலங்கையர் ஒருவர் நியுசிலாந்தில் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதல் குறித்து மேலதிக தகவல்களை நியுசிலாந்திடமிருந்து கோரியுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட சம்பவம் குறித்து நியுசிலாந்து அதிகாரிகள் விரிவான தகவல்களை இன்னமும் வழங்கவில்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயந்தகொலம்பகே மேலதிக தகவல்களிற்காக காத்திருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
நியுசிலாந்தின் விசாரணைகளுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு இலங்கை தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் மற்றும் சந்தேகநபர் குறித்து ஆகக்குறைந்த அடிப்படை தகவல்கள் மாத்திரமே எங்களிற்கு தெரியும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கலைப்பீட கற்றல் நடவடிக்கைகளை மீள் ஆரம்பிக்குமாறு மாணவர் ஒன்றியம் கோரிக்கை!
மே 29 முதல் ஜூன் 4 வரை தேசிய சுற்றாடல் வாரம்
நேற்றும் 12 விபத்து மரணங்கள்!
|
|